Sunday, December 28, 2014

இடைவேளை


இடைவிடாமல்  பேசிய உன் உதடுகள்,
இடைவேளை விட்டு சென்ற இடைவெளிதான்,
என்னை விட்டு சென்றிருக்கும்
உன் தாய் வீடு.

பிரிவில் இருக்கும் வலியை
புரிந்துகொள்ள வைத்திருக்கிறது,
பெண்ணே.......

விரைவில் வந்துவிடு -  என்
விரல்களுக்குள் சேர்த்துவிடு....

** பிரகாஷ்  **

Sunday, December 14, 2014

காலை வணக்கம்



ஆணின் மனதை கிழித்து
வழியைக் கூட்டி
இதயத்தைச்  சென்றடையும்,
பெண்ணின் விழிக் கற்றை.....

வானின் வனப்பைக் கூட்டி
இமையத்தை தாண்டி
என்னை வந்தடைகிறது,
சூரியனின் ஒளிக்கற்றை.....

** பிரகாஷ்  **