Sunday, December 28, 2014

இடைவேளை


இடைவிடாமல்  பேசிய உன் உதடுகள்,
இடைவேளை விட்டு சென்ற இடைவெளிதான்,
என்னை விட்டு சென்றிருக்கும்
உன் தாய் வீடு.

பிரிவில் இருக்கும் வலியை
புரிந்துகொள்ள வைத்திருக்கிறது,
பெண்ணே.......

விரைவில் வந்துவிடு -  என்
விரல்களுக்குள் சேர்த்துவிடு....

** பிரகாஷ்  **

Sunday, December 14, 2014

காலை வணக்கம்



ஆணின் மனதை கிழித்து
வழியைக் கூட்டி
இதயத்தைச்  சென்றடையும்,
பெண்ணின் விழிக் கற்றை.....

வானின் வனப்பைக் கூட்டி
இமையத்தை தாண்டி
என்னை வந்தடைகிறது,
சூரியனின் ஒளிக்கற்றை.....

** பிரகாஷ்  **

Sunday, November 30, 2014

என்னவளே!..



என்னவளே !..
நான் நிறைவேற்றியது
உன் ஆசைகளின் ஒரு பகுதி...
அதற்குள், என்னை வீரனாகிவிட்டாய்..
பெண்ணே என் ஆசையையும்
சற்றே நிறைவேற்றிவிடு,
உன் விருப்ப பட்டியலுக்கு முற்றுப்புள்ளி வைதுவிடதே...
ஏனெனில், 
நீ விரும்பியதை மீறியும் 
உன்னை கவனித்துக்கொள்ள ஆசை...

-பிரகாஷ் 

Friday, November 14, 2014

பார்வை


அப்படி மட்டும் பார்கதே
ஆயுதம்  ஏந்தி வரும் தோட்டாக்களை விட,
வலுவாக தாக்கிறது என் இதயத்தை...
அனால் வலியை ஏற்படுத்தவில்லை
வலையை ஏற்படுத்திவிட்டது
உன்னையே சுற்றி வர சொல்லி........

** பிரகாஷ்  **

Thursday, November 6, 2014

கண்கள்


என் வீட்டிலுருந்து பேருந்து நிலையம் வரை,
அவசரமாக ஓடிக்கொண்டிருப்பது,
என் கால்கள் மட்டும் அல்ல,
என் இதயமும்தான்....
பேருந்து நின்று செல்லும் இரு நிமிடங்களாவது,
உன் கண்களின் தரிசனம் பெற்றுவிட வேண்டுமென்று....

** பிரகாஷ்  **