Saturday, December 22, 2018

அருகின் ஆனந்தம்


தொடுதல் இல்லாமல் உரசும் விந்தை,
தடம் ஏதுமில்லாமல் ஊடுருவும் விந்தை,
துளிர்கின்ற ஆசையோ என்னுள் - தேவதை
யுன்னால் உணர்கின்றேன்,
தினம் தினம் உன் அருகில் வருகையில்...
*பிரகாஷ்*


Friday, December 14, 2018

ஊடலின் காதல்

கோபத்தில் உடைத்திடுவாய்
நான் கொடுத்திட்ட பொருட்களினை
சிதறிய துண்டுகளெல்லாம் உன்னிடம்  பேசிவிடும் - உன்
சிந்தையில் இருந்து உடைத்திட முடியாது -பெண்ணே
நீ அவன் மேல் கொண்ட காதலினை.
கோபத்திலும்... காதலிப்பாய்....


*Prakash*